Featured post

இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச்

 *இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் !  – “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 ம...

Wednesday, 7 July 2021

நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும்

 நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் பரபர சஸ்பென்ஸ் திரில்லர்

 "  My Name is Shruthi "  

நடிகை ஹன்சிகா மோத்வானி,  ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும்   "  My Name is Shruthi "  எனும் பரபர திரில்லர் படத்தில் நடிப்பதில் உற்சாகத்தில் உள்ளார்.   இந்தப்படம் சுதந்திரமாக இயங்கும்  ஒரு பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்ட, ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும்.  அந்தப் பெண் ஒரு எதிர்பாரத  அசாதாரண சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எவ்வாறு தப்பிச் செல்கிறார் என்பதே கதை.  இதற்கு மேல் விவரிப்பது தவறாக இருக்கும் மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை  கெடுத்து விடும்.  நல்ல அனுபவம் மிகுந்த பல நடிகர்கள், இயக்குநர்களுடன் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்ததில்,  ஒரு கதை விவரிக்கப்படும்போதே, கதையில் உள்ள நிறை குறைகளை, கதையின் திருப்பங்களை கொஞ்சம் எளிதாக அறிந்து கொள்ள முடியும், ஆனால் இயக்குனர் ஶ்ரீநிவாஸ் ஓம்கார் இந்தக்கதையை மிகவும் அற்புதமாக என்னிடம் விவரித்தார், படத்தில் பல காட்சிகளை அவர் விவரிக்கும் போது இருக்கை நுனியில் தான் அமர்ந்திருந்தேன் ஆரம்பத்திலிருந்து படத்தின் கிளைமாக்ஸ் வரை, எந்த இடத்திலும் என்னால் படத்தின் கதை எப்படி செல்லும் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.  படத்தில் அமைந்துள்ள திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ் திரையில் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக நம்புகிறேன். திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள்








இந்தப் படத்தின் நடிகர் முளரி ஷர்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மார்க் கே ராபின் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார்,  Kishore Boyidapu ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை  Ramya Burugu மற்றும்  Nagender Raju இருவரும் Vaishnavi Arts நிறுவனம் சார்பில்  தயாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment