Featured post

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர்

 *துருவ் விக்ரம் நடிக்கும்,  “பைசன் காளமடான்”  திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!* இயக்குநர் மார...

Sunday, 25 July 2021

திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான்

 திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் அவர்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்தார். அப்போது, கனடாவை சேர்ந்த ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான திரு.சுரேஷ் ரோஹின் அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பி வைத்திருந்த ஒரு கோடி இருபது இலட்சங்கள் மதிப்பிலான 14  Portable Ventilator கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கும் பொருட்டு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் தங்கர் பச்சான்  இன்று ஒப்படைத்தார். 



அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் தட்டுப்பாட்டின் காரணமாக உயிரிழந்த கொரோனா நோயாளியின் சம்பவத்தை கனடா நண்பருடன் பகிர்ந்து கொண்டதனால் அவர் இந்தக் கருவிகளை வாங்கி அனுப்பி வைத்ததாக தங்கர் பச்சான் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகிநீடு அவர்களும் உடன் இருந்தார்.




No comments:

Post a Comment