Featured post

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women

 Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women* *Director Vijay Sri G requests...

Saturday, 28 May 2022

மஞ்சித் சிங் ,சபரி நாயர்,சோனாலி ஜெயின் ஆகியோர்

 மஞ்சித் சிங் ,சபரி நாயர்,சோனாலி ஜெயின் ஆகியோர் முன்னெடுத்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தமிழ்நாடு மாரத்தான் போட்டியில்  பல்வேறு பிரபலங்கள்  கலந்து கொள்கின்றனர்
Sportzpro & tamilnadu athletic  இணைந்து முதன் முறையாக வருகின்ற ஜூன் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் பிரபலங்கள் பலரும், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல் வருகின்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கோயம்புத்தூர் மற்றும் திருச்சியிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.



 இந்த மாநில அளவிலான மாரத்தான் போட்டியை  சென்னை கோஸ்டல் ரோட்டரி கிளப் தலைவர் மஞ்சித் சிங்,ஸ்போர்ட்ஸ்ப்ரோ இயக்குனர் சபரி நாயர்,  ஜிஆர் சோனாலி ஜெயின் உள்ளிட்டோர் இந்த மாரத்தான்  போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த மாரத்தான் போட்டியின்  நோக்கமாக மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும் உதவி செயலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல் ஆகியவை  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய செய்தியை பரப்புவதற்காக மாரத்தான் அமைப்புடன்  இணைந்துள்ளன.

 இந்த மாரத்தான் போட்டியின் மூலம் நிதி, உள்கட்டமைப்பு, சத்தான உணவுகள்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள் என அனைவருக்குமான ஆதரவு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட உள்ளனர்.

 இந்த மாரத்தான் போட்டியின்  போது இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

 தமிழ்நாடு மாரத்தான் 2022 என்கிற மாநில அளவிலான மாரத்தான் போட்டியை உருவாக்கியதில் ஸ்போர்ட்ஸ் ப்ரோ இயக்குனர் சபரி நாயர்  மூளையாக செயல்பட்டவர் அவர் கூறுகையில் மாரத்தான் மூலம் மக்களிடையே ஒற்றுமை மற்றும் பிணைப்பு  உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் மேலும் ஆரோக்கியமான உடற்பயிற்சி வழங்குவதை ஊக்குவிப்பதாகவும் இதுபோன்ற மாரத்தான் போட்டி நிச்சயமாக நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடற்பயிற்சி வழக்கத்தை தொடங்குவதற்கான புதிய தொடக்கமாக இருக்கும்.

 தொற்று நோய்க்கு  பின்பாக நடைபெற உள்ள மாரத்தான் போட்டியை  சமூக ஊடக தளத்திலும் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களிலும், டிஜிட்டல் மீடியாவிலும் பிரச்சாரங்கள் செய்யப்படும்.
 நடைபெறவுள்ள மாரத்தான் போட்டி அனைவருக்குமான உந்துசக்தியாக இருக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment