Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Friday, 9 December 2022

வரலாறு படைத்த "காதல் தேசம்"! தெலுங்கில் ரி-ரிலீஸ் செய்த

 வரலாறு படைத்த "காதல் தேசம்"! 

தெலுங்கில் ரி-ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் !*


 தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களை வைத்து பிரம்மாண்ட படங்களாக  தயாரித்தவர் கே.டி.கே என்றழைக்கப்படும் மெகா புரோடியூசர் 'ஜென்டில்மேன்' கே.டி. குஞ்சுமோன். 





இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வினியோகஸ்தர்களுக்கு வசூல் சாதனை படைத்த படங்களாகும். பிரமாண்டமாகவும், ஒலி ஒளி நேர்த்தியாகவும் படைக்கப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படங்களாக தயாரித்தவர் கே.டி.கே. 


ரஜினிகாந்தின் #பாபா படத்தை ரி-ரிலீஸ் செய்கிறார்கள். இதற்கு முன்னோடியாக கே.டி.கே தயாரித்த "காதல் தேசம்" படத்தை முதல் கட்டமாக தெலுங்கில் இன்று  வெளியிடுகிறார். 

இளைஞர்களை காதலில் கிரங்கடித்த இந்த படத்தை இசை நேர்த்தியுடன் புதிய கலர் சேர்ப்பில் தெலுங்கில்  #பிரேமதேசம் என்ற பெயரில் புத்தம் புது காப்பியாக இன்று வெளியாகியுள்ளது. 

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 200- க்கும் அதிகமான திரை அரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டு சாதனை படத்துள்ளார் கே.டி.கே. 

வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்து கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்துக்கு இசை புயல் 

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரஹ்மானின் இசை பயணத்தில் காதல் தேசம் திருப்புமுனையாக அமைந்தது . படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் முணு முணுக்கப்பட்டு பிரபலமடைந்தது. இதில் வரும் *முஸ்தஃபா முஸ்தஃபா* பாடல் தலைமுறைகளை தாண்டி இன்றும் பிரபலம். சமீபத்தில் மறைந்த பிரபல டைரக்டர் கே.வி.ஆனந்த் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான படமும் இதுவே.

 1996-ல்  இப்படம் வெளியிட்டபோது  ஆந்திரா  மற்றும் கர்நாடகாவில் ஒரு வருடங்களுக்கு மேல் திரையிடப்பட்டு  வசூலில் சாதனை படைத்தது.

ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்களும் மக்களை வியப்படைய வைத்தது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா மற்றும் பல படங்கள்  மீண்டும் வெளியிட இருக்கும் வேளையில்.. அப்படங்களுக்கு முன்னோடியாக "பிரேம தேசம்" படத்தை  வெளியிட்டு மீண்டும் தன்னை முதன்மை தயாரிப்பாளராக அடையாளப் படுத்தியுள்ளார் 

கே.டி. குஞ்சுமோன். 

இவர் அடுத்து தயாரித்து வரும் "ஜென்டில்மேன்2" படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளும் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது.



No comments:

Post a Comment