Featured post

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு*

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு* ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சின...

Friday, 2 December 2022

சதுரங்கப் போட்டியில் அர்ஜுனா விருதைப்

சதுரங்கப் போட்டியில் அர்ஜுனா விருதைப் பெற்ற முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன்!


சென்னை முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் கிராண்ட் மாஸ்டர் R.பிரக்ஞானந்தா அவர்கள் நவம்பர் 30, 2022 அன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2022 -ஆம் ஆண்டின் விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்று , மதிப்புமிகு இந்திய ஜனாதிபதி திருமதி. திரௌபதி முர்மு
 
 
அவர்களின் பொற் கரங்களினால் மிகச்சிறப்பு மிக்க அர்ஜுனா விருதைப் பெற்று சதுரங்கப் போட்டியில் சிகரத்தை அடைவதற்கு வழிகாட்டியாக இருந்த பள்ளிக்குப் பெருமை சேர்த்ததோடு தமிழ்நாட்டிற்கும் பெருமை
சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இந்த வீரரின் விளையாட்டு வாழ்க்கைப் பயணத்தில் இவர் 10 வயதில் வரலாற்றில் இளைய சர்வதேச மாஸ்டர் ஆனார். கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை 12 வயதில் பெற்றார். இந்நிகழ்வே இவரை இளம் வயதில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தகுதியை அடையச் செய்தது. மேலும் தொடர்ந்து இவர் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான உலக சாம்பியன்  மேக்னஸ் கார்ல்சனை ஆறு மாதங்களில் தொடர்ச்சியாக மூன்று முறை தோற்கடித்தார். இது ஒரு புகழ்பெற்ற சாதனையாக அமைந்து இன்று 17 வயதில் சதுரங்க வீரருக்கான அடையாளத்தை தேசிய அளவில் தந்துள்ளது.

 இச்சிறப்பு மிக்க விருதினைப் பெற்றுத் தந்த
மாணவனைப் பள்ளி நிர்வாகமும்  ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment