Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Saturday, 8 July 2023

லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கியது

 *லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கியது*... 


பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில்  தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர்


இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இதற்காக கிரிக்கெட் பயிற்சிகளை நாயகர்கள் எடுத்துக் கொண்டனர். அனைவரும் பார்க்கும் வண்ணம் எண்டெர்டெய்னிங் ஜானர் படமாக "லப்பர் பந்து" தயாராகி வருகிறது. 



சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது


இந்நிலையில் லப்பர் பந்து படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.  


நாக்ஸ் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கிய நிகழ்வில் நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி டப்பிங் பேசினார்.


பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு A. வெங்கடேஷ். நிர்வாகத் தயாரிப்பு ஷ்ராவந்தி சாய்நாத். தயாரிப்பு மேற்பார்வை AP பால்பாண்டி.

No comments:

Post a Comment