Featured post

The Girl Friend Movie Review

The Girl Friend Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம the girlfriend படத்தோட review அ தான் பாக்க போறோம். Rashmika Mandanna, Dheekshith Sh...

Monday, 6 January 2025

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும்

 *ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு*




*நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்*


தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சீப் பிசினஸ் ஆபிசர் உமேஷ் குமார் பன்சால் பேசுகையில், '' தனித்துவம் மிக்க மற்றும் அழுத்தமான கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு 'கிங்ஸ்டன்' திரைப்படம் ஒரு சான்றாகும். ஜீ.வி. பிரகாஷ் குமாரின் அபாரமான திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கற்பனையுடன் கூடிய சாகசம் நிறைந்த படைப்பு ..பார்வையாளர்களை கவரும். மேலும் இந்த பிரம்மாண்டமான படைப்பில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.'' என்றார். 


அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ' கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்,  திவ்ய பாரதி, 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன் , குமரவேல் , சபு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.‌ இப்படத்தின் வசனங்களை தீவிக் எழுத, படத் தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனித்திருக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் அதிரடி சண்டை காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். கடல் பின்னணியில் ஹாரர் அட்வென்ச்சர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார். 


இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் - படத்தை பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 


இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் 'கிங்ஸ்டன்' படத்திற்காக சில பிரத்யேக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் முதன்முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படம் அவர் நடிப்பில் உருவாகும் 25- வது படமாகும்.  இந்த திரைப்படத்திற்காக அவர் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதால்.. படத்திற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது. 


இந்தத் திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் என பட தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.‌

No comments:

Post a Comment