Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Tuesday, 14 January 2025

பாடலாசிரியரான விஜய்சேதுபதி

 *பாடலாசிரியரான விஜய்சேதுபதி!* 

*"பன் பட்டர் ஜாம்"  படத்திற்காக எழுதிய பாடலை  நடிகர் சித்தார்த் பாடினார்.* 




Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர்  சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், 

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், 

பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்'. 


மக்கள் செல்வன் முதன்முறையாக பாடலாசிரியராக

 “பன் பட்டர் ஜாம்” படத்தில் அறிமுகமாகியுள்ளார். காதலின் அழுத்தத்தை சொல்லும் விதமாக டியூன் ஒன்றை  மெலோடியாக அமைத்தார். இதற்கு யதார்த்தமான வரிகள் அமைய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக நிவாஸின்  நண்பரான நடிகர் விஜய் சேதுபதியிடம்  கேட்டதும் அவர் ஒத்து கொண்டு, “ஏதோ பேசத்தானே.. என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே..” என்று வரிகளை உடனே எழுதி கொடுத்தார். நிவாஸ் ஓகே சொல்ல முழு பாடலையும் எழுதி “பன் பட்டர் ஜாம்” டீமை ஆச்சர்ய படுத்தினார் பாடலாசிரியர் விஜய் சேதுபதி. டூயட் பாடலான இதை முன்னணி நடிகர் சித்தார்த் பாடி அசத்தியுள்ளார்.

அவருடன் இணைந்து “ஜெயிலர்” தமன்னா பாடலான  “காவாலா..”  பாடல் புகழ் ஷில்பா ராவ் பாடியுள்ளனர். 


காதலன், காதலியின் ஊடலைச் சொல்லும் இப்பாடல் முழுதும், புதுமையாக சென்னை சப்வே ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் பாபி மாஸ்டர் இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். பாடல் வீடியோவில் பாடல் உருவான பின்னணியும், பாடலின் அழகான  காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 


இளைஞர்களின் இளமை துள்ளலுடன், காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும், வெகு அழகான மெலடியான “ஏதோ பேசத்தானே” பாடல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


இறந்தகாலம், எதிர்காலம் பற்றிய கவலைகளை மறந்து, நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம். 


ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 


சைஸ் ஜீரோ, பாரம் படங்களின் திரைக்கதையை எழுதியவரும், காலங்களில் அவள் வசந்தம் பட இயக்குநருமான ராகவ் மிர்தாத், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். 


பிக்பாஸ் புகழ் ராஜூ நாயகனாக நடித்துள்ளார், ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை &  V.J பப்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, படத்தை திரையங்குக்கு கொண்டுவரும், இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


தயாரிப்பு நிறுவனம் : Rain Of Arrows Entertainment 

எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத் 

இசை:  நிவாஸ் K பிரசன்னா

ஒளிப்பதிவு : பாபு குமார் IE

எடிட்டர்: ஜான் ஆபிரகாம்

கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகி : M.J.பாரதி

மக்கள் தொடர்பு : ஜான்சன்

No comments:

Post a Comment