Featured post

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில்

 சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !!  தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ்,  தன் உதவும் குணத்த...

Thursday 25 October 2018

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது.


‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’.

சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment