Featured post

A Patriotic Film Festival has been organised

 A Patriotic Film Festival has been organised by N. F. D. C.(National Film Development Corporation)  and National Film Archive of India from...

Wednesday, 31 October 2018

அஜீத் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடிப்பில்

“அஜீத் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும்
‘பில்லா பாண்டி’ படத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு”

பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள நண்பர்களுக்கு வணக்கம் ஆர்.கே.சுரேஷ் நடப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ‘பில்லா பாண்டி’ இந்த படத்தினை திரு.கே.சி.பிரபாத் ஜே கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்...


இவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான திரு ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம்
‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம்
என ஆசைவார்த்தை கூறி படம் 60%எடுத்துக்கொண்டிருக்கும்போது மேற்குறிப்பிட்ட திரு கே.சி.பிரபாத் அவர்கள் புதிதாக  படம் எடுக்கப்போகிறேன் என்று
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு ஏ.ஜமால் சாகிப் அவர்களை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லாபாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.

ஏன் என்று விளக்கம் கேட்டபோது...’பில்லா பாண்டி’படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்...

ஆனால் இதுவரை மேற்படி
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு.ஏ.ஜமால் சாகிப் அவர்களுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் திரு.கே.சி.பிரபாத் அவர்கள் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment