Featured post

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

 *மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”  பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* *பிரியங்கா மோகன் நடிக்கும்,  க...

Sunday, 28 December 2025

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

 *மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”  பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!*




*பிரியங்கா மோகன் நடிக்கும்,  கன்னட படமான  “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!*


கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில்  அறிமுகமான பிரியங்கா மோகன்  நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார்.   தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.


இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


Vaishak J Films தயாரிப்பில்,  ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம்,  70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான  ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.


தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான  ஒந்த் கதே ஹெல்லா  Ondh Kathe Hella  படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.


‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது.   பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன்,  ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.


தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.


‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவுள்ளது.  இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

No comments:

Post a Comment