Featured post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் ட...

Sunday, 2 June 2019

எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு ஒரு கூலிங்கிளாஸ் வழங்கி யிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

நேரம் - காலம், வெயில் - மழை, சொந்தம் - பந்தம், மனைவி - மக்கள்,  விருப்பு - வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது. அதிலும் குறிப்பாக  போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது.

நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில்,  சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள்.

அத்தகைய மாமனிதர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு  ஒரு கூலிங்கிளாஸ் வழங்கி யிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

ஜெய்வந்த் 'மத்திய சென்னை', 'காட்டுப்பய காளி' ஆகிய திரைப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது 'அசால்ட்' எனும் அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பினை தனக்கு ஏற்படுத்தித் தந்த காவல் துறையினருக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்தார் ஜெய்வந்த்.



No comments:

Post a Comment