Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Saturday, 22 June 2019

மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன

.

இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் "மழை சாரல் " .
இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார்.


' காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே' என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன.


 ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில்  ஒரு படத்திற்கு பாடல்களை  உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம் எனப் பெயர் மாற்றி முதல் ஆல்பமாக மழை சாரலை உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் மியூசிக் டைரக்டர் யாதவ் ராமலிங்கம் அவர்களை பாராட்டி ஆல்பத்தை  வெளியிட்டது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


ஆல்பத்தின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமரசத்துக்கு இடமின்றி செலவு செய்துள்ளனர். எனவே லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பயன்படுத்தப் பட்டுள்ளதாக யாதவ் ராமலிங்கம் கூறுகிறார். முந்தைய பாடல்கள் போலவே இந்த ஆல்பமும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment