Featured post

A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!

 *A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!* The much-awaited romantic comedy Aaromaley is gearing up to hit the...

Saturday, 3 October 2020

பிக்பாஸ் சீசன்-4ல் சனம் ஷெட்டி

*பிக்பாஸ் சீசன்-4ல் சனம் ஷெட்டி*

*பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி*

*பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி ?*

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன்,  நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.




அம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. அதுமட்டுமல்ல, 2016-ஆம் ஆண்டிற்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்டு, மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினையும் வென்றுள்ளார் 

கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள இந்த சமயத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கிய சனம் ஷெட்டி. பல நூறு குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

கடந்த வருடம் அவரை சுற்றி சில பிரச்சனைகள் சுழன்றடித்தாலும், அதையெல்லாம் தனது மன வலிமையால் எதிர்கொண்ட சனம் ஷெட்டி, தற்போது நுழையப்போகும் பிக்பாஸ் வீட்டிலும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால், தன்மீது அவதூறாக வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, தான் யார் என்பதையும் சனம் ஷெட்டி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment