Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Tuesday, 15 December 2020

பல்லாண்டு காலமாக சின்னத்திரை, பெரிய திரை என எதுவாயினும்

 பல்லாண்டு காலமாக சின்னத்திரை, பெரிய திரை என எதுவாயினும் பன்முகத் திறமையில் அசத்தி, நட்சத்திர வெளிச்சத்தில் தொடர்ந்து பயணிக்கும் நபராக, அனைவரின் அன்பை பெற்றவராக இருந்து வருகிறார் டிடி நீலகண்டன். அவரது பன்முக திறமைக்கு சான்றாக தற்போது புதியதோர் பயணம் துவங்கியுள்ளார். “என்னு நிண்டே மொய்தீன்” மலையாள படத்திலிருந்து  ஆத்மாவை உருக்கும் மெலடி பாடலான “முக்காதே பெண்ணே” பாடலை மிக அழகாக மீளுருவாக்கம் செய்துள்ளார் டிடி. 









இது குறித்து டிடி நீலகண்டன் கூறியதாவது...


மிகச்சில காதல் பாடல்களே உணர்வுகளின் அடிநாதத்தை மீட்டுவதாக இருக்கும். நம் உதட்டில் புன்னகை தவழ, நெஞ்சின் அடியாளத்தில் இருந்து உணர்வை மீட்டி கண்ணில் நீர் துளிர்க்க செய்யும். நம் ஆத்மாவுடன் உரையாடலை உண்டாக்கும். 


“முக்காதே பெண்ணே”  அந்த வகையில் மிக முக்கியமான பாடல் இது. கேட்பவர்களின் மனதை உருக்கி அவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் பாடல். அப்பாடலை தீவிரமாக ரசிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருத்தி. அப்பாடலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன். வெகு இயல்பாக காதலை, சந்தோஷத்தை, பிரிவை நம்முள் உலவ விடும் இப்படாலுக்கும் மேலும் இப்படத்திற்கும் மிகத்தீவிரமான ரசிகை. இப்படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிரித்விராஜ், பார்வதி நடிப்பை வெகுவாக ரசித்தேன். இப்பாடலில் தன் தனி முத்திரையை பதித்திருக்கும் நிகில் மேத்யூவிற்கி நன்றி. என்னுடன் இணைந்து நடித்த கிரிஷ் மிகச்சிறப்பான பணியினை செய்திருந்தார். ரசிகர்கள் எனது இந்த சிறு முயற்சியை ரசிப்பார்கள் என நம்புகிறேன். ஒரிஜினல்  பாடலில்  உண்மையான மேஜிக்கை கொண்டுவந்த பிரித்விராஜ், பார்வதி, கோபி சுந்தர் மற்றும் இயக்குநர் V.S.விமல் மில்லியனுக்கும் மேற்பட்ட  ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை தந்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி. சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநர் மரியா ஜீனா ஜான்சன் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.  இந்த யோசனையை நான் சாதாரணமாகப் பகிர்ந்தபோது, ​​அவர் உடனடியாக ஊக்கப்படுத்தினார் மற்றும் பாடல் பதிவுக்கு எனக்கு உதவி ஊக்குவித்தார்.



டிடி நீலகண்டன் இப்பாடலின் வடிவத்தை உருவாக்கி  இயக்கியுள்ளார். இப்பாடலை  பாடியுள்ளார் நிகில் மேத்யூ. இஷான் தேவ் ( அடிசனல் வோகல்ஸ் ), திலீப் ஹார்னர் ( கீஸ் ), அக்கர்ஸ் N காஷ்யப் ( வயலின் ), இஷான் தேவ் ( மிக்ஸ் & மாஸ்டர் ), கவிதா தாமோதரன் ( எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ) சுதர்சன் ( ஒளிப்பதிவு, படத்தொகுப்பு & டிஐ ), அஷ்வின் தியாகராஜன் ( உடைகள் ),MS பிங்க் பேந்தர் ( ஜிவல்லரி ), இப்ராஹிம் & ராகவன் ( மேக்கப் & ஹேர் ஸ்டைலிஸ்ட் ), பிரசாந்த் ( கிம்பல் ஆபரேட்டர் ), பிரதீப் ராஜா, கோபி கிரிஷ் & சுவாகத் ( ஒளிப்பதிவு குழு ) ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

No comments:

Post a Comment