Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Tuesday, 15 December 2020

அன்பு வணக்கம் லைட்மேன் உனக்குள்

அன்பு வணக்கம் லைட்மேன் உனக்குள் நான் திரைப்படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் எழுதுகிறேன் ஒரு சந்தோஷமான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்!!!

 










உயர்திரு ராவ் சாஹிப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்புடையவர் !!! 1934 முதல் 1940 வரை மெட்ராஸ் மாகாணத்தின் வட்டாட்சித் துணைத் தலைவராகப் (Deputy Collector) பணிபுரிந்தார் !

அவரின் கொள்ளு பேரனாகிய நான் எனது தாத்தாவின் தமிழ் படைப்புக்களை ஆராய்ந்து வருகிறேன். அண்மையில் நான் கண்டுபிடித்த ஒரு புத்தகத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ரஷ்ய அறிஞர் "லியோ டால்ஸ்டாய்" அவர்களின் முத்தான மூன்று சிறுகதைகளை திரு கோதண்டபாணி பிள்ளை அவர்கள் 1932ஆம் ஆண்டு "கதைமணிக்கோவை" (Stories from Tolstoy) தலைப்பின் மூலம் தமிழிலில் மொழிபெயர்த்து உள்ளர் !!! டால்ஸ்டாய் மொழிபெயர்ப்புகளில் முதலில் வெளிவந்த தமிழ் புத்தகம் இதுவே ஆகும்!!!

 

இவ்புத்தகம் தமிழ் பள்ளிகளில் இருவது ஆண்டு காலம் பாடநூலாக இருந்து உள்ளது. கடந்த வருடம் இந்த புத்தகம் என் கையில் கிடைத்தவுடன் "லியோ டால்ஸ்டாய்" பிறந்த ஊரான யாசனயா போலியானா வில் அவர் வாழ்ந்த வீட்டிற்கு அவரின் இன்றைய தலைமுறையினரிடம் இந்த புத்தகத்தை அனுப்பி வைத்தேன்.அவர்களின் அழைப்பின் பெயரில் அங்கு நடந்த பதினான்காவது உலக மொழிபெயர்ப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டேன்  அங்கு "லியோ டால்ஸ்டாய்" தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி உரை ஆற்றினேன் !!! அவர் பேரனின் குடும்பத்திடம் புத்தகத்தை ஒப்படைத்துவிட்டு தாய்மண்ணிற்கு வந்துஅடைந்தேன் !!!

 

சென்ற மாதம் வெளிவந்த அவர்களின் ஆண்டு விழாமலரில் என்னுரை வெளிவந்துள்ளது !!! இத்தருணத்தில் உங்களிடம் இச்ச்செய்தியை பகிர்ந்துகொள்வதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன் !!! இவ்புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் என்னுரையின் ஒரு தொகுப்பும்  இனைத்துஉள்ளேன்.



No comments:

Post a Comment