Featured post

Thalaivar Thambi Thalaimaiyil Review

Thalaivar Thambi Thalaimaiyil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thalaivar thambi thalamaiyil  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த...

Monday, 11 January 2021

கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா.

 *கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா... கேரளாவில் பரபரப்பு*


*கிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்*


பிரபல நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் "பெளவ் வெளவ்" படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா.


படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து  கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.


கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார். 


இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, "கட் கட் சூப்பர்" என கை தட்டினர், இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா.


இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டனர். 


நமீதாஸ் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ் நாத் பிக்சர்ஸ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் "பெளவ் வெளவ்" படத்தின் வசனம் மற்றும் பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.  கிருஷ்ணா பி.ஏஸ். ஒளிப்பதிவு செய்கிறார். ரெஜிமோன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அனில் கும்பளா செய்திருக்கிறார்.


எஸ் நாத் ஃபிலிம்ஸ் சுபாஷ் மற்றும் நமீதாஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் பெளவ் வெளவ் படத்தை  ஆர் எல் ரவி - மேத்யூ ஸ்கேரியா ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது. 


இயக்கம் : ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா 

ஒளிப்பதிவு: கிருஷ்ணா பி.எஸ்

இசை: ரெஜிமோன்

வசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம்

நிர்வாகத் தயாரிப்பு: சுரேஷ் புன்னசேரில். 

கலை இயக்கம் : அனில் கும்பளா. சண்டை வடிவமைப்பு : ஃபையர் கார்த்தி. படத்தொகுப்பு: அனந்து எஸ் விஜய்.

தயாரிப்பு: நமீதாஸ் புரொடக்சன்ஸ் & எஸ் நாத் ஃபிலிம்ஸ்.

மக்கள் தொடர்பு: இரா. குமரேசன்.

No comments:

Post a Comment