Featured post

2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன்

 2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர...

Friday, 29 January 2021

Veerapuram 220 trailer

 வீராபுரம் 220 திரைப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 6மணிக்கு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவர்கள் வெளியிடுகிறார்.. இத்திரைப்படத்தில் 'அங்காடி தெரு'மகேஷ் மற்றும் மேக்னா, மற்றும் வில்லனாக சதீஷ் நடித்துள்ளனர்.மேலும் இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் செந்தில் குமார் கூறியதாவது..







 'வீராபுரம் 220' எனது முதல் திரைப்படம் ஆகும்.இதில் 'அங்காடி தெரு' மகேஷ் ,மேக்னா எலன்,மற்றும் வில்லனாக சதீஷ் அறிமுகமாகிறார் மேலும் பலர் நடித்துள்ளனர்.சுபம் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுச்சாமி தயாரித்துள்ளார்..மேலும் குணசேகரன் மற்றும் கன்னியப்பன் இணைத் தயாரிப்பு செய்துள்ளார்கள்..

இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது..மேலும் மணல் கொள்ளையை மையப்படுத்தியும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளது.இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment