Featured post

2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன்

 2026 ஜனவரி 4ஆம் தேதி, எங்களின் அன்பிற்குரிய திரு. எம். சரவணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர...

Wednesday, 27 January 2021

ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான

 ஜனவரி 29 அன்று ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது (Master Movie) 


சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம். 


மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 - அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம்  வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேகமான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29, 2021 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம். 


இது குறித்து அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவரும், இயக்குநருமான விஜய் சுப்ரமணியம் கூறுகையில், ‘அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பில் நாங்க பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இந்த மாதம் இப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் உள்ள தங்களின் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து இந்த சமீபத்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ரசிப்பதற்கான தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ என்றார்


இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தளபதி விஜய் கூறியுள்ளதாவது: இப்படத்தில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜான் துரைராஜ் என்ற ஒரு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படும் அவர், அங்குத் தனது எதிரியான பவானியைச் சந்திக்கிறார். விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் பவானி கதாபாத்திரம் அந்தப் பள்ளிக் குழந்தைகளைத் தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார். ஜான் மற்றும் பவானிக்கும் இடையிலான சுவாரஸ்ய மோதல்கள் பார்வையாளர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ரோலர் கோஸ்டர் பயணமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அமேசான் ப்ரைம் விடியோவில் இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ இவ்வாறு விஜய் கூறியுள்ளார். 



தனது படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது: மாஸ்டர் படம் இரண்டு வலிமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் கொண்டுள்ளது. இது மக்களை திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யும் காரணிகளாக அமைந்துள்ளது. எனினும், அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாவதன் மூலம் வீட்டில் உள்ள பார்வையாளர்களையும், சாத்தியமற்ற பகுதிகளையும் அடைய நாங்கள் விரும்புகிறோம். என் படம் அமேசான் ப்ரைம் வீடியோவின் மூலம் உலகளாவிய அளவில் வெளியாவது ஒரு இயக்குநராக மிகவும் திருப்தியாக உள்ளது. வரும் ஜனவரி 29 முதல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.   


கதைச் சுருக்கம்: 


சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியர் ஒருவருக்கு, அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டர் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment