Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Saturday, 17 April 2021

வேலம்மாள் பள்ளி மாணவி ஓவியப்போட்டியில் சாதனை படைத்தார்

அண்மையில்  "இந்து யங் வேர்ல்ட் "நாளிதழ்   "ஜே.எஸ்.டபிள்யூ பெயின்ட்ஸ் ஃபியூச்சர் ஸ்கேப்ஸ்" நிறுவனத்துடன் இணைந்து நடத்திய பெயிண்டிங் போட்டியில் கலந்து கொண்ட  மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 8 ஆம் வகுப்பு மாணவி .செல்வி. எஸ்.பி.ஷ்ரவந்திகா,
போட்டியில் சாதனையாளர்க்கான


ரூ .10,000 ரொக்கப் பரிசை வென்றுள்ளார். இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 48,000 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இறுதியாகப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட 580 போட்டியாளர்களில் ஒருவராக முன்னேறிய எஸ்.பி.ஷ்ரவந்திகா இறுதியில்
 தகுதியை வென்ற 9 போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார் 

இந்தப் போட்டி இளம் மற்றும் வளரும் கலைஞர்களுக்கு தங்களை வெளிப்படுத்தவும் அவர்களின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் முறையாகச் சித்தரிக்கவும் ஒரு நல்வாய்ப்பை அளிப்பதாக இருந்தது. இந்த இளம் கலைஞரின் அற்புதமான சாதனையைப் பள்ளி நிர்வாகம் வாழ்த்தி ஊக்குவித்தது.

No comments:

Post a Comment