Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Monday, 26 April 2021

பிரம்மாண்டமான ராட்சச குரங்கு நடிக்கும் " கபி " ஸ்ரீ தேனாண்டாள்

பிரம்மாண்டமான ராட்சச குரங்கு நடிக்கும் " கபி " ஸ்ரீ தேனாண்டாள்
பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது



இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கு நடிக்கும் படத்தை நூறு படங்களை தயாரித்த வெற்றிப்பட நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் என்.இராமசாமி தயாரிக்கிறார்.

இந்தப்படத்திற்கு " கபி " என்று பெயரிட்டுள்ளனர். இதன் முதல் பார்வை ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு
கவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர். இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பல்வேறு விலங்குகளை நடிக்க வைத்து பல வெற்றிப்படங்களை தந்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் " கபி " படத்தின் தயாரிப்பில் கூட்டு சேர்ந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment