Featured post

Freedom” Starring Sasikumar and Lijomol Jose Set for Worldwide Release on July 10 !!

 “Freedom” Starring Sasikumar and Lijomol Jose Set for Worldwide Release on July 10 !! Directed by Sathyasiva, the film “Freedom,” featuring...

Friday, 2 July 2021

தந்தை, மகள் பாசத்தை சொல்லும் ராஜாமகள்

 *மகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மிடில் கிளாஸ் தந்தை*

*தந்தை, மகள் பாசத்தை சொல்லும் ராஜாமகள்*

*ஹென்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராஜாமகள்*






க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.


நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணிஅமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. 


பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாகியிருக்கிறார் இயக்குனர் ஹென்றி.


முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரங்களிலும், மகாபலிபுரம், திருத்தணி, போன்ற பகுதிகளிலும், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.


விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment