Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Saturday, 17 July 2021

இயக்குனர் டீகேயின் 'கருங்காப்பியம்'

 இயக்குனர் டீகேயின் 'கருங்காப்பியம்'


முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.



'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில்  நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.


பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 


இப்படத்தின் இறுதிகட்ட பணிகள்  நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment