Featured post

Pre-release Event of Ameer Starring

Pre-release Event of Ameer Starring UyirThamizukku Movie* Moon Pictures presents 'UyirThamizukku,' a political drama helmed by debut...

Tuesday 7 September 2021

செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும்

செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் 

Mr, Miss & Mrs Fashion World 2021


இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தும் 'Mr, Miss & Mrs Fashion World 2021’-ன் மாபெரும் இறுதிச்சுற்று, வரும் செப்டம்பர் 26ஆம் தேதி, பல்வேறு திரைப்பிரபலங்கள் முன்னிலையில், கோவாவில் நடுக்கடலில் வைத்து மெஜஸ்டிக் பிரைட் கப்பலில் நடைபெற உள்ளது.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் அமலன், Mr, Miss & Mrs Fashion World 2021’ இறுதிப்போட்டியை கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடுக்கடலில் வைத்து, மெஜஸ்டிக் பிரைட் கப்பலில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டி'லா வாலண்டினா நிறுவனம் நடத்தும், இந்த மாபெரும் போட்டியின் வாயிலாக கிடைக்கும் நிதியை, கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்காகவும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 



ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவுகளில் நடைபெறும் இந்த மாபெரும் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து அழகும், திறமையும் வாய்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில், பிரபல தமிழ் நடிகைகளான ஓவியா, அபினயா உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகர் ஷபிர் அலி, பிரபல ஆடை வடிவமைப்பாளர் லூசிலியா ஃபெர்னாண்டஸ், நட்சத்திர ஃபேஷன் பயிற்றுநர் கருண் ராமன், ஃபேஷன் குயின் சினேகா நாயர், சையது சனாயுல்லா மற்றும் பிரபல மாடலும், மருத்துவருமான ஜெயா மகேஷ்  ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.










இதில் வெற்றி பெறுபவர்கள், பல்கேரியா, ஜார்ஜியா, துருக்கி மற்றும் துபாய் உள்ளிட்ட சர்வதேச மாடலிங் தளங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய வாய்ப்பை பெறுவர். மேலும், இந்தியாவில் கப்பல் பயணத்தில் இவ்வளவு பெரிய போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி, போட்டியைத் தொடர்ந்து கண்கவர் IFL ஃபேஷன் ஷோ நடைபெற உள்ளது.

Registration Link:

No comments:

Post a Comment