Featured post

Black Team Reunites! Jiiva 46 Kicks Off with a Grand Launch!

Black Team Reunites! Jiiva 46 Kicks Off with a Grand Launch! Actor Jiiva teams up once again with director KG Balasubramani of Black fame fo...

Saturday, 16 October 2021

Labrynth Films வழங்க, இயக்குநர் மனோஜ்

 Labrynth Films வழங்க, இயக்குநர் மனோஜ் பீடா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் “ஏஜெண்ட் கண்ணாயிரம்” !



Labrynth Films தயாரிப்பு நிறுவனம்  தமிழ் திரைத்துறையில் “வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம்,  தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர்  மனோஜ் பீடா இயக்கத்தில்  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது. 




தன்னிந்திய திரைத்துறையில் இளம் தலைமுறையில், அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஆகியவற்றை வெளியிட்டார்.  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் படப்பிடிப்பு  ஏற்கனவே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 


நடிகர் சந்தானம் மற்றும் ரியா சுமன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், அவர்களுடன் இணைந்து,  ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E ராமதாஸ், அருவி மதன், ஆதிரா, இந்துமதி, ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் குரு சோமசுந்தரம்  கௌரவ வேடத்தில்  நடித்துள்ளார்.



இயக்குநர்  மனோஜ் பீடா இயக்கியுள்ள  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம்  நடிகர் சந்தானத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் காட்டும். ‘டிக்கிலோனா’ படத்தின் பெரு வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் சந்தானத்துடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அஜய் எடிட்டர், ராஜேஷ் கலை இயக்குநர், ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட் மாஸ்டர், பிரசன்னா ஜே.கே நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளர், ஆகிய பணிகளை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment