Featured post

BOONIE BEARS: GUARDIAN CODE

 *BOONIE BEARS: GUARDIAN CODE* இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். பூனி பியர்ஸ் த...

Wednesday 27 October 2021

புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, புற்றுநோயிலிருந்து

புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு, டாக்டர்.அனிதா ரமேஷ், சோனாலி ஜெயின் மற்றும் நடிகர் பப்லு பிருத்விராஜ் ஆகியோர் போராளிகள் தின விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. கொடிய உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அனுசரிக்கப்படும் இந்த புற்றுநோய் விழிப்புணர்வு மாதம், இளஞ்சிவப்பு மாதம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இளஞ்சிவப்பு மாதத்தை முன்னிட்டு, சென்னை சிட்டி சென்டரில் போராளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், புற்றுநோய்க்கு எதிராகப் போராடி, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவர்கள் ஆகியோருக்கு போராளிகள் தின விருதுகள் வழங்கப்பட்டன.
































































































































இந்த விழாவில், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஆதரவளித்து, அவர்களை புற்றுநோயில் இருந்து குணமடையச் செய்த எஃப்.எஃப்.சி. நிறுவனர் டாக்டர்.அனிதா ரமேஷ், சமூக ஆர்வலர் சோனாலி ஜெயின் மற்றும் நடிகர் பப்லு பிருத்விராஜ் ஆகியோர், மருத்துவர்கள் புவனேஷ்வரி, ஹரிகிருஷ்ணன், மணிகண்ணன் மற்றும் ரவிக்குமார் உள்ளிட்ட மொத்தம் 25 மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். அதேபோல், கொடிய புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த 30 பேர் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் புற்றுநோய்க்கு எதிரான தங்களது போராட்ட பயணத்தை கூறியது, அவையில் இருந்தவர்களை வியக்க வைத்தது. மேலும், இந்த விழாவில், கவுங்கார் சங்கம் சார்பில் 40 பெண்களுக்கு இலவச புற்றுநோய் முகாம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திரு.செல்வம், திருமதி.நீர்ஜா மாலிக், திருமதி.சாந்தி பிரேம்ராஜ் மற்றும் டாக்டர்.சுனிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment