Featured post

மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா புகழ் சஷி செலியா, மாஸ்டர்செஃப் இந்தியா

 மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா புகழ் சஷி செலியா, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழின் இம்யூனிட்டி பின் சவாலில் சமையல் கலை ஜுவாலையை எழுப்புகிறார்!   மாஸ்ட...

Friday 22 October 2021

பிரகாசிக்கும் வேலம்மாள் பள்ளி மாணவனின் செயல்திறன்

 பிரகாசிக்கும் வேலம்மாள் பள்ளி மாணவனின்   செயல்திறன்

 மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் முதலாம் வகுப்பு மாணவன் பி. மோனிஷ் பாலாஜி, மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம்( CBSE) சமீபத்தில்   நடத்திய  இணையவழி சர்வதேச கணிதப் போட்டியில் பங்கேற்று  தேசிய அளவில்


 பிரிக்ஸ் கணிதத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மாணவர்களின் கணித அறிவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் இப்போட்டியில் மாணவன் மோனிஷ் தேசிய அளவில் அழியாப் புகழ்  பெற்று முத்திரை பதித்துள்ளார்   இதன்மூலம் அவர் சர்வதேச கணிதப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இதில் உலகின் 7 நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, ன்னாப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம்) இருந்து குழந்தைகள் பங்கேற்கிறார்கள். பிரிக்ஸ் கணிதம் என்பது தர்க்கரீதியான பகுத்தறிவை உருவாக்க வடிவமைக்கப்பட்ட தனித்துவமான, நடைமுறைப் பணிகளைக் கொண்ட ஒரு ஊடாடும் அணுகுமுறையுடன் கூடிய சர்வதேசப் போட்டியாகும். 

 


 


அவரது அற்புதமான சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது மற்றும் அவர் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment