Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Saturday, 16 October 2021

ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து

 ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன்  ROMEO PICTURES இணைந்து தயாரிக்கும்,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில்,  போனி கபூர்  வழங்கும் உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி”படத்தின், டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது ! 


திரையுலகில் சில திரைப்படங்கள் மட்டுமே அதன் அறிவிப்பு வெளியாகும்போதே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடிய படைப்புகளாக இருக்கும். அந்த வகையில்  ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன்  ROMEO PICTURES இணைந்து தயாரிக்கும்,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில்,  போனி கபூர்  வழங்கும் உதயநிதி ஸ்டாலினின் “நெஞ்சுக்கு நீதி” படம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள, இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். முன்பே அறிவித்தபடி, இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்த,  மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் ஹிட்டடித்த இந்தி திரைப்படமான 'ஆர்டிகள் 15' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம்  வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம்  ஸ்டண்ட், C H பாலு  ஸ்டில்ஸ், யுகபாரதி மற்றும் அருண்ராஜா காமராஜ், தமிழரசன் பச்சமுத்து  வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன்  ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


Romeo Pictures இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.  இந்த படத்தின் ஆடியோ லேபிளை Zee Music South வெளியிடுகிறது.

No comments:

Post a Comment