Featured post

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery

Prompt Diagnosis Ends An Eight-Year-Old Girl’s Medical Mystery Kauvery Hospital, Radial Road, performed a one-of-its-kind Bilateral Intraves...

Saturday, 12 February 2022

கேரளாவுக்கு டிரீட்மெண்டுக்காக செல்லும் விஷால்!

 கேரளாவுக்கு டிரீட்மெண்டுக்காக செல்லும் விஷால்! 


கடந்த 55 நாட்களுக்கும் மேலாக #லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், விஷால். 



படத்தில் இடம் பெறும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் நடந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் போட்டு படபிடிப்பை நடத்தி வந்தார் பீட்டர் ஹெயின் மாஸ்டர்.  அடியாட்களுடன் மோதிக் கொண்டு  குழந்தையுடன் கீழே குதிக்கும் காட்சியில் நொடி பொழுது 'மிஸ்' ஆனதால் காங்ரீட் சுவற்றில் மோதி கையில் அடிப்பட்டது. சில மணிநேரம் டிரீட்மெண்ட் எடுத்து விட்டு மீண்டும் படபிடிப்பை தொடர்ந்தார். அடிபட்டதையும் பொருட் படுத்தாமல் #வீரமேவாகைசூடும் பட புரொமோஷலில் கலந்து கொண்டும் .. மீண்டும் படபிடிப்பிலும் கலந்து கொண்டார். கை வலியுடன் படபிடிப்பில் கலந்து கொண்ட  அவருக்கு மேலும் படபிடிப்பில் கலந்து கொள்ளமுடியாமல் போனது. அதனால், முதலில் கைக்கு டிரீட்மெண்ட் எடுத்துகொள்ளலாம். பிறகு படபிடிப்பை தொடரலாம் என, ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர்கள் ரமணா, நந்தா முடிவு செய்தார்கள். 


அதனால் நாளை கேரளாவுக்கு சென்று விஷால் டிரீட்மெண்ட் எடுக்கிறார். முழுக்க சுகமானதும் மீண்டும் மார்ச் மாதம் படபிடிப்பு  தொடரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment