Featured post

Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines

 Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines—enter Samriddhi Tara The Tamil audience has traditionally been inclined ...

Sunday, 9 February 2025

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் 'டிமாண்டி காலனி 2'

 பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் 'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட  நடத்தி வருகிறார். 







இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை  ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக்கட்டளை மற்றும் பி.டி.ஜி யூனிவர்சல் இணைந்து  திரைத்துறையில் பணிப்புரியும் 277 தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை மகளிர் சங்க ஊழியர்களுக்கு அவர்களின் பணிநேரங்களில் பயன்படும் வகையில் அனைவருக்கும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி சாலிகிராமத்தில் உள்ள மகளிர் ஊழியர்கள் சங்கம் கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்  தலைவர் திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரைத்துறை பணியாளர்களுக்கு அவர்களின் பணியில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்நிகழ்வு நடைபெற்றது.

No comments:

Post a Comment