Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Friday, 28 February 2025

ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல்

 *ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் !!*








*செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!*



*கவிப்பேரரசு வைரமுத்து  வரிகளில், ஸ்ரீ பி 

இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில்

A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்...*


மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி 

நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. 


இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர். 


இந்நிகழ்வினில் 


*நடிகர் ரியோ கூறியதாவது..*


இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின்  பர்ஃபாமன்ஸ்  மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ் ஐயர் உடைய பாடல்கள் தனித்தனியாக பிரம்மாதமாக இருக்கும். இதில் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பாடி இருக்கிறார்கள்.  அது இன்னும் அற்புதமாக இருக்கிறது.  ஹூக் ஸ்டெப்-க்கு பெயர் போன ஸ்ரீதர் சார்  உடைய நடன  அமைப்பு இதில் பிரம்மாதமாக இருக்கிறது. இந்த பாடல் கேட்பதற்கு கேட்சியாகவும், ரசிக்கும் படியும் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். 


*மகேந்திரன் கூறியதாவது..*


இந்த பாடலின் தயாரிப்பாளருக்கு எனது  வாழ்த்துகள், இதுபோன்ற பாடல்களை  நீங்கள் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும்.  நடன இயக்குனர் ஸ்ரீதர் மிகவும் திறமையானவர் மற்றும் சினிமா மீது மிகவும் நேசம் கொண்டவர், அவர் இந்த பாடலை  மிகச்சிறப்பான பாடலாக மாற்றியுள்ளார்,. இசையமைப்பாளருடைய பணியும், பேச்சும் மிகச்சிறப்பாக இருக்கிறது. பாடலின் கதாநாயகன் மகேஷ் மிக கடுமையான உழைப்பாளி. மஹேஷ் எப்போதும் "சிறந்த முறையில் செயல்பட வேண்டும், மற்றும் திறமையான முறையில் முன்னேற வேண்டும்" என கூறுவர்.மகேஷ், இப்போது நீங்கள் இருக்கும் இந்த ஸ்டேஜ் மிகவும் சிறியது; விரைவில் நீங்கள் அதற்கு மேலான, மிகப்பெரிய ஸ்டேஜ்களில் சாதனை புரிவீர்கள். அபிராமி மிகவும் திறமையான, அனைத்து மொழி  மக்களையும் ஈர்க்க கூடிய வகையில் தனது நடிப்பை கொடுத்து வருகிறார். அவருடைய திறமைக்கும், அடக்கத்திற்கும் அவர் மிகப்பெரிய வெற்றிய பெற வேண்டும். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.


*நடிகர் சௌந்தராஜன் கூறியதாவது..*


இந்த பாடலின் கதாநாயகன் மகேஷ் தான் என்னை அழைத்தார். நாங்கள் சில நிகழ்வுகளில் சந்தித்தோம். அவர் மிகவும் கடின உழைப்பாளி. நடிகை அபிராமி மிகவும் நுணுக்கமான எக்ஸ்பிரசன் கொடுப்பதில் வல்லவர். அவருடைய நடிப்பு மிக அற்புதமாக இருந்தது.  இந்த பாடலில் எடிட்டிங் மற்றும் கதை சொல்லும் விதத்தில் ஒரு அழகான  ரிதத்தை பின்பற்றி இருக்கிறார்கள்.  பாடல் வரிகள், இசை அமைப்பு, நடன அமைப்பு என அனைத்தும் இந்த பாடலில் மிகச்சரியாக இருக்கிறது. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். 


*நடன அமைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது..*


மகேஷ் மற்றும் அம்மு அபிராமி இருவரும் மிக அழகாக  நடித்து இருக்கின்றனர்.   கதையின் கருவை அவர்கள் தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர்.  இசையமைப்பாளர் உடைய கடின உழைப்பு, இந்த பாடலை மெருகேற்றியுள்ளது.  ஜீவி பிரகாஷ் மற்றும் நரேஷ் உடைய குரலில் இந்த பாடல் மேலும் சிறப்பாக மாறியுள்ளது. இயக்குநர் மான்டேஜ்  மற்றும் நடன அமைப்புகள் என இரண்டையும் சிறப்பாக கோர்த்துள்ளார். இந்த குழு மேலும் நிறைய படங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். படக்குழுவை வாழ்த்துக்கிறேன்.


*எடிட்டர் முத்தையன் கூறியதாவது..*


என்னை நம்பி இந்த புராஜக்ட் கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் இசையும், வரிகளும், அதற்கான நடன அமைப்பும் மிக அற்புதமாக வந்துள்ளது.  பாடல் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் 


*ஒளிப்பதிவாளர் ஜோசப் கூறியதாவது,,*


இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.  நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு இந்த பாடல் வாய்ப்பையும், மேடை வாய்ப்பையும் கொடுத்த குழுவிற்கு நன்றி. இது ஒரு மிகச்சிறந்த பாடல் அனைவரும் ரசிக்ககூடிய பாடல். அனைவருக்கும் நன்றி. 


*இசையமைப்பாளர் ஶ்ரீ பி கூறியதாவது..,*


இந்த பாடலை மகேஷ் உணர்வுபூர்வமாக கடத்தி இருக்கிறார்.  ஜிவி பிரகாஷ் சார் மற்றும் நரேஷ் இருவரும் மெர்சல் அரசன் பாடலிற்கு பிறகு, இந்த பாடலில் தான்  இணைந்து இருக்கிறார்கள்.  அவர்கள் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நடன இயக்குனர் ஸ்ரீதர் இந்த படத்தில் மெலடிக்கு ஏற்ற ஒரு நடன அமைப்பை கொடுத்து, பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கிறார். வைரமுத்து சாருடைய பங்களிப்பு அளப்பறியது.  இயக்குநர் இந்தப் பாடலுக்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார்.  படக்குழுவினர் அனைவரும் கடின உழைப்பை கொடுத்து இந்த பாடலை அற்புதமான பாடலாக மாற்றி இருக்கிறார்கள். 



*நடிகர் மகேஷ் சுப்பிரமணியம் கூறியதாவது...*


தயாரிப்பாளர்கள் மது மற்றும் கார்த்திக் இருவருக்கும் நன்றி என் குறும்படம்  பார்த்து , எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஒரு கதைக்கருவுடன் இந்த பாடலை உருவாக்கலாம் என்றார் இயக்குநர் சபரி. இது நிறைய பட்ஜெட் தேவைப்படும் பாடல் ஆனால் மிக அழகாக இதை உருவாக்கி விட்டார் சபரி. ராட்சசன் படத்திலிருந்து, நான் அம்மு அபிராமி ரசிகன் மிக அற்புதமான நடிகை என்னுடன் நடித்ததற்கு நன்றி. ஸ்ரீ என் நண்பர் இந்த ஆல்பம் பற்றி சொன்னவுடன் ஆர்வமுடன் வந்தார், மிக அழகான இசையை தந்துள்ளார். ஜீவி மற்றும் நரேஷ் ஐயர் ரசிகன் நான் இந்த பாடல் அவர்கள் பாடியது மகிழ்ச்சி. இந்த ஆல்பத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து சார் எழுதியுள்ளார்.

ரியோ,அவரது பிஸியான கால அட்டவணை இருந்தபோதிலும், எனக்காக இந்த வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். விஜய் டிவியின் ஜோடி நடன நிகழ்ச்சியில் இருந்து தொடங்கியது எங்கள் நட்பு. 

மகேந்திரன் தனது படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னுடைய எல்லா முக்கியமான நிகழ்வுகளுக்கும் எப்போதும் உடனிருப்பவர்.


எனது பெற்றோருக்கும், மனைவி பிரேமலதாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் தூங்கும் வரை அவள் தூங்க மாட்டாள், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரிய ஆதரவாக இருந்தாள்.கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் பிடிக்கும் நன்றி. 


*நடிகை அம்மு அபிராமி கூறியதாவது..,*


இங்கிருக்கும் அனைவரும் திறமையானவர்கள் என்பதைத்  தாண்டி, அன்பானவர்கள்.  இந்த பாடல் குழு,  ஒரு குடும்பமாக செயல்பட்டு, இந்த பாடலை உருவாக்கி இருக்கின்றனர்.  இந்த படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி..  புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. குரல் கொடுத்த ஜீவி பிரகாஷ், நரேஷ் மற்றும்  ரக்ஷித்ராவிற்கு  நன்றி.   ஸ்ரீதர் மாஸ்டர் மிகவும் நேர்த்தியான முறையில் பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார். அனைவருக்கும் என் நன்றிகள் .


*தயாரிப்பாளர் மது கூறியதாவது..*


இது ஒரு சாதாரண மாலை உரையாடலுடன் தொடங்கியது

ஊடகத்துறையில் நுழைவது குறித்து எங்களிடம் எந்த தகுந்த அனுபவமும் இல்லை.


மகேஷ் எங்களுக்கு எல்லாவற்றையும் விரிவாக விளக்கி சொன்னார்,என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர் தெளிவான பார்வையில் வைத்திருந்தார்.. மகேஷ், தான் என்ன செய்கிறார் என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. இங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மகேஷ் எங்களுக்கு பதிவிட்டு வந்தார். இயக்குனர் சபரி தான் செய்வதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார், அது எங்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. இசையமைப்பாளர் ஸ்ரீ பி இசையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.


திறமையானவர்கள் அனைவரும் இந்த பாடலில் இணைந்துள்ளனர்.  அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தெளிவான பார்வையுடன் இந்த பாடலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.  பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.  இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவு தேவை.


*இயக்குநர் சபரி மணிகண்டன் கூறியதாவது...*


மகேஷ் மூலம் தான் இந்த புராஜக்ட் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். மது இன்று தான் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார், கார்த்திக் மது இருவரும் எல்லாவற்றையும் எங்களிடம் நம்பி விட்டு விட்டார், அவருக்கு என் நன்றிகள். அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார்,  ஷீட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார்.  ஸ்ரீதர் மாஸ்டர் அவர் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். படம் வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர். ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம் நன்றி. 



காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது. அப்படிப்பட்ட  ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு. 


இப்பாடலின் தீமை உருவாக்கி இன்றைய ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குநர் சபரி மணிகண்டன். 


காதலின் பல்வேறு தருணங்களை தன் பேனாவால் வரலாறாக்கிய கவிப்பேரசு வைரமுத்து, இந்த செகண்ட் சான்ஸ் பாடலை எழுதியுள்ளார். இளம் இசையமைப்பாளர் ஶ்ரீ இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். இசை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் பாடகர்கள் நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளனர்.  


கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் இளமை துள்ளும் வகையிலான நடன அசைவுகளுடன் அனைவருக்கும் பிடிக்கும்படியான நடன அமைப்பை செய்துள்ளார். 


ஜோசப் பால் ஒளிப்பதிவு செய்ய, முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார். கோபிநாத் கலை இயக்கம் செய்துள்ளார். 


பிரம்மாண்ட பொரிட்செலவில், A Spot Light Entertainment சார்பில் கார்த்திக், மது இப்பாடலை தயாரித்துள்ளனர். 


காதலின் மறுபக்கத்தை அழகாக பேசும் இந்த ஆல்பம் பாடலை அனைத்து இசை தளங்களிலும் ரசிக்கலாம்.


https://youtu.be/87pCY0Bm_8o

No comments:

Post a Comment