*நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் !*
மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார். தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம்.
இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில், பெரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.
இயக்குநர் அபிஷேக் நாமா தலைமையில் உருவாகும் இந்தப் படம், பக்தியும் அதிரடி அம்சங்களும் இணைந்த ஒரு அற்புதமான திரை அனுபவமாக இருக்கும். ஆழமான ஆன்மீக கருப்பொருளுடன் கூடிய வணிக ரீதியான கூறுகளையும் கொண்ட இந்தக் கதை, ஆன்மீக சினிமாவுக்கே புதிய வரையறையை தரவுள்ளது.
படத்தின் முக்கிய சிறப்பம்சமாக உருவாகும் “ஓம் வீர நாகா” எனும் பக்திப் பாடல் தற்போது பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
இப்பாடல் ராமானாயுடு ஸ்டூடியோவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிவன் கோவில் செட்டில் படமாக்கப்படுகிறது. ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் தலைமையிலான குழு, அந்தக் கோவிலின் தெய்வீகத் தோற்றத்தை, உயிரோட்டமூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
இப்பாடலுக்கான இசையை அபே மற்றும் ஜுனைத் குமார் ஆகியோர் அமைத்துள்ளனர், வரிகளை ஸ்ரீ ஹர்ஷா எழுதியுள்ளார்.
மேலும், பாலிவுட்டின் பிரபல நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா இந்தப் பாடலுக்கான நடன வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
மேலும் இந்தப் பாடல் கார்த்திகை மாதத்தில் படமாக்கப்படுவது அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை இன்னும் உயர்த்துகிறது.
இந்தப் படம் இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோவில்களின் பின்னணியில் உருவாகி, நூற்றாண்டுகள் பழமையான நாகபந்தம் எனப்படும் மறைக்கப்பட்ட ஆன்மீக மரபை வெளிக்கொணர்கிறது.
பத்மநாபசுவாமி, புரி ஜகந்நாதர் போன்ற கோவில்களில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷக் கதைகளில் இருந்து ஊக்கம் பெற்று, புராணமும் மர்மமும் கலந்த ஒரு தெய்வீகத் திரில்லராக இது உருவாகி வருகிறது.
படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சௌந்தர்ராஜன் S மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை R.C. பிரணவ் மேற்கொள்கிறார்.
நாகபந்தம் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
விரைவில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் துவங்கவுள்ளன.
*நடிப்பு:*
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்
*தொழில்நுட்பக் குழு:*
கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S
இசை – அபே, ஜுனைத் குமார்
ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்
எடிட்டிங் – R.C. பிரணவ்
CEO – வாசு பொடினி
*

No comments:
Post a Comment