Featured post

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026

 HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026  JioHotstar releases the launch ...

Tuesday, 26 February 2019

பிரபுதேவா நடிக்கும் எங் மங் சங் படத்துக்காக சண்டை காட்சிகள் சீனாவில் படமானது.

பிரபுதேவா நடிக்கும் 
              எங் மங் சங் படத்துக்காக சண்டை காட்சிகள் சீனாவில்  படமானது.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங் "

இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.









மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி,சித்ராலட்சுமனன்கும்கி அஸ்வின் காளிவெங்கட்,முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.
 ஒளிப்பதிவு  -  RP.குருதேவ்
எடிட்டிங் -    பாசில் - நிரஞ்சன்
பாடல்கள்  -   பிரபுதேவா மு.ரவிகுமார்
இசை  -    அம்ரீஷ்
நடனம்   -     ஸ்ரீதர்,நோபல்                                                                                                                                                                           
ஸ்டண்ட்   -    சில்வா
தயாரிப்பு  -    கே.எஸ்.சீனிவாசன்  கே.எஸ்.சிவராமன்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். அர்ஜுன் .M.S. கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டை காட்சிகளை சில்வா அமைக்க படமாக்கப் பட்டது.
குங்பூ  மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக சிரத்தை எடுத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...

1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட படமாக எங் மங் சங் உருவாகிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment