Featured post

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026

 HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026  JioHotstar releases the launch ...

Thursday, 28 February 2019

நயன்தாராவின் வில்லன் நடிகர் ஷான் " இயக்கி " படம் மூலம் இயக்குனரானார்

நயன்தாராவின் வில்லன் நடிகர் ஷான் " இயக்கி " படம் மூலம்  இயக்குனரானார்
                                          
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் "டோரா" இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ஷான் பரபரப்பாக பேசப்பட்டார்..

இப்போது “ இயக்கி “ என்கிற  குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்...

கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகடிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்கு காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..







ஆனால் ஷானின் இயக்கி குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான்.. அவர்களுக்கும்  சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் ஷான்..

26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை உரசிப் பார்த்திருக்கிற  இயக்கி -யின் இயக்குனர் ஷான் என்ன சொல்கிறார்..

இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன்...500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தை கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன்.பட்டம் படித்து விட்டு உணவு உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கும்  அவர்களது வலியை சொல்லி மாளாது..கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களுக்கான வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு..மனிதாபிமானம் என்ற ஒன்றையே  மறந்து போய் விட்டார்கள். 

இப்படியே போனால் அடுத்த தலை முறை அடிமை வாழ்க்கைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தானே உண்மை...உண்மையை ஊரறிய சொல்லி இருக்கிறேன். இயக்கி மாதிரி இன்னும் நிறைய இருக்கு..இப்போதைக்கு நல்ல நல்ல படங்களில் நடிக்கனும் ...நல்ல நடிகன்னு பேர் எடுக்க வேண்டும் இது தான் என் ஆசை என்கிறார் ஷான். வாழ்க ...வளர்க..வரவேற்போம்..

No comments:

Post a Comment