Featured post

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து* 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் த...

Tuesday, 9 July 2019

விவசாயிகளை ஊக்குவிக்க பரிசு போட்டி அறிவித்திருக்கும் நடிகர் கார்த்தி


நடிப்பு பிரதானமாக இருந்தாலும் சமூக சேவையிலும் சமூக நலனுக்காக அக்கறை செலுத்துபவர்களில் நடிகர் கார்த்திக்கும் ஒருவர். அவருக்கு நடிப்பைத் தாண்டி விவசாயத்தில் ஆர்வம் அதிகம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்தார். விவசாயத்தை மையப்படுத்தி அவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்குப் பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் துவங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும், உழவு செய்வதை எளிமைக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார். தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள ‘கைதி’ படம் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து, ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment