Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Sunday, 28 July 2019

தனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !


நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது . 
இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .

தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை .




இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர்கள் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் .

இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு " 1500  க்கும் மேற்பட்ட  ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார் .


பிறகு விழாவில் நடிகர் தனுஷ் , ஐஸ்வர்யா தனுஷ் , மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

தனுஷ் பேசியவை :


இரத்த தானம் செய்த உங்களை  நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி . அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும்  , ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் .

No comments:

Post a Comment