Featured post

Malayalam actor Kamal Roy passes away at 54 due to cardiac arrest

 *Malayalam actor Kamal Roy passes away at 54 due to cardiac arrest* Kamal Roy was the brother of celebrated actors Kalaranjini, Kalpana (La...

Saturday, 20 July 2019

ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்





ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது 18வது படைப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

ஒரு காங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி  நடிக்க,  இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவிலேயே வெளியிடப்பட உள்ளது.


கார்த்திக் சுப்பாராஜ்  எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக  சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்.


நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்

தனுஷ்
ஐஸ்வர்யா லட்சுமி

தயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா

ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இசை: சந்தோஷ் நாராயணன்

படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்

கலை: வினோத் ராஜ்குமார்

சண்டை பயிற்சி : அன்பறிவ்

நடனம்: எம் செரிஃப், பாபா பாஸ்கர்

ஒலி வடிவமைப்பு: விஷ்ணு கோவிந்த் ஸ்ரீ சங்கர் (சவுண்ட் ஃபேக்டர்)

தயாரிப்பு ஒருங்கினைப்பு: முத்துராமலிங்கம்

ஆடை வடிவமைப்பு: D.பிரவீன் ராஜா

ஒப்பனை: ஏ சபரி கிரீசன்

விளம்பர வடிவமைப்பு: டியூனி ஜான் (24 AM)

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

No comments:

Post a Comment