Featured post

Nirvaagam Porupalla Movie Review

Nirvaagam Porupalla Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  nirvagam பொறுப்பல்ல   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இ...

Wednesday, 22 January 2020

Actor Gopi Gandhi Releases Jallikattu Song

ஜல்லிக்கட்டு விழாவையொட்டி திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி  இசையமைப்பாளர் அழகுமுருகன் இசையமைத்த “தொட்டுப்பார்! தொட்டுப்பார்!”  என்ற ஜல்லிக்கட்டு சிறப்புப் பாடலை வெளியிட்டார்.
சென்னை, ஜனவரி 16 :  தமிழகத்தின் பாரம்பரிய கலையான வீரக்கலை விளையாட்டு ஜல்லிக்கட்டு திருவிழாவையொட்டி நாமக்கல்லைச் சேர்ந்த இசையமைப்பாளர் அழகுமுருகன் இசையமைத்த “தொட்டுப்பார், தொட்டுப்பார்” என்ற ஜல்லிக்கட்டு சிறப்புப் பாடலை              வெளியிட்டார்.  இதுகுறித்து கோபிகாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு வீரக்கலை.   அக்கலைக்காக அரசையே எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து மக்கள் சக்தி என்றும் சக்தி வாய்ந்தது என்று நிரூபித்து                காட்டினார்கள்.  இந்த மக்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல்ல செயல்களுக்கு  கண்டிப்பாக மீண்டும் வருவார்கள், அவர்களை ஒரு போதும் ஆட்சி அதிகாரத்தால் எவரும்            




அடக்க முடியாது.  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்போடு விளையாட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் கோபிகாந்தி.  ஜல்லிக்கட்டு விழாவையொட்டி நாமக்கல்லைச் சேர்ந்த இசையமைப்பாளர் அழகுமுருகன் இசையமைத்த “தொட்டுப்பார் தொட்டுப்பார்” என்ற    ஜல்லிக்கட்டு சிறப்புப் பாடலை வெளியிட்டார், இசையமைப்பாளர் அழகுமுருகன் பாடியுள்ளார். அப்பாடலுக்கு நெல்லைசுதா பாடல்களுக்கு வரி எழுதியுள்ளார்.  இசையமைப்பாளர் அழகுமுருகன் இசைமீதுள்ள ஆர்வத்தால் கடந்த பதினைந்து வருடங்களாக சென்னையில் போராடி வருகிறார்.  பல்வேறு விழிப்புணர்வு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சென்னையில் இசைப்பள்ளியும் நடத்தி வருகிறார்.  ஜல்லிக்கட்டு பாடலுக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.  ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களும், இளைஞர்களும் இப்பாடலுக்கு ஆதரவளிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.  மேலும் என்னுடைய              “வீரக்கலை” 

திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்கும் பணியையும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.  பல்வேறு போராட்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து வரும் அவருக்கு கண்டிப்பாக கடவுள் விரைவில் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கி பெரிய இசையமைப்பாளராக கண்டிப்பாக வருவார்.   அவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.  இவ்வாறு திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.                                    செய்தி வெளியீடு
    ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம்,                                 சென்னை

No comments:

Post a Comment