Featured post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் ட...

Thursday, 5 March 2020

அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம்

அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கவிருக்கிறது. குற்றம் 23 படத்துக்குப் பின் அறிவழகனுடன் அருண் விஜய் இணையும் த்ரில்லர் படம் இது. 

கோலிவுட்டில் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அருண் விஜய். ஏவி31 என்று அறியப்படும் இந்தப் படத்துக்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தத் தயாராகி வருகிறார். கிட்டத்தட்ட 15 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த கட்ட படப்பிடிப்பில் டெல்லி ஆக்ரா  உள்ளிட்ட இடங்களில் துரத்தல், சண்டைக் காட்சிகள் 



படமாக்கப்படவுள்ளன.சண்டைக் காட்சிகளோடு யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

முதல் முறையாக அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ரெஜினா. மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

No comments:

Post a Comment