Featured post

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special  குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்! பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்க...

Sunday, 14 June 2020

வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ்

வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "ஜெயில்" சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்!

அங்காடி தெரு, வெயில், அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது புதிய கண்ணோட்டத்தில்,
ஜி .வி பிரகாஷ் குமார், அபர்நதி, நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.

தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி வெளியாகிறது.

 அங்காடி தெரு, வெயில் படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை, நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு  ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ், அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள். கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார். தனுஷ்,   ஜி.வி.பிரகாஷ் அசுரன் படத்திற்கு பிறகு இசையில் இணைந்துள்ளார். இந்த பாடலை ஜூன் 15-ம்  தேதி மாலை 6 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஸ்ரீதரன் மரியதாசன்

ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி,  விஷாலின்  இரும்புத்திரை  ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டவர்.

தயாரிப்பு மேற்பார்வை பி.டி. செல்வகுமார், கேமரா கணேஷ் சந்திரா, பாடல்கள் கபிலன், இசை ஜி.வி.பிரகாஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வசந்தபாலன்.

P.T.Selvakumar
@rajkumar_pro

No comments:

Post a Comment