Featured post

Heartiley Battery Webseries Movie Review

Heartiley Battery Webseries Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம heartiley battery webseries  review அ பாக்க போறோம். இந்த series zee 5 ல ...

Thursday, 25 June 2020

முதன்றையாக நான்கு மொழிகளில்

முதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் 'சக்ரா' நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் படத்தின் ட்ரெய்லர்* ! விஷால் நடித்து வரும் 'சக்ரா' படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னகத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால்,கன்னடத்தில் யஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாக இருக்கிறது.இதற்கு முன் வெளியான 'சக்ரா'வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் இது இரும்புத்திரை படம் போல் இருக்குமா? இது 'இரும்புத்திரை 2ஆம் பாகமா? என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறார்கள். இதுபற்றி இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது ' "சைபர் க்ரைம் பற்றிய படம்தான் "சக்ரா"வும் என்றாலும் இரும்புத்திரைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இருக்காது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் புதிய தளத்தில் காட்சிகள் இருக்கும். இதில் கதாநாயகன் விஷால் தான் என்றாலும் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் உங்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும். ஆனால் அவை வழக்கம் போல் இருக்காது. ஒரு வினாடி கூட பார்வையாளர்கள் கவனம் தவற விட முடியாத அளவுக்கு அவர்களை இருக்கையின் நுனியில் கட்டிப் போடும் படமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் ." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர். விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்கும் எம்.எஸ். ஆனந்தன் , இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பின்னணியுள்ள கதையாக "சக்ரா" உருவாகி வருகிறது. வங்கிக் கொள்ளையர்களை விட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை விளங்க வைக்கும் கதை. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன். ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.!

No comments:

Post a Comment