Featured post

GDN FIRST LOOK RELEASED: MADHAVAN'S TRANSFORMATION INTO 'THE EDISON OF INDIA' CAPTIVATES AUDIENCES

 GDN FIRST LOOK RELEASED: MADHAVAN'S TRANSFORMATION INTO 'THE EDISON OF INDIA' CAPTIVATES AUDIENCES CHENNAI, October 26, 2025 – ...

Tuesday, 23 June 2020

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம்  ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில்  வெளியாகிறது. விரைவில் உலகெங்கும்  வெளியாக உள்ளது.
















ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார். ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரின் இயல்பான நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் 130 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அனுபவசாலி நடிகர்,  நெப்போலியன் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது. இப்படம் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் திக் திக் நகர்வுகளுக்கு பிளாட்டினம் சிறப்பைப்பைப்பெற்ற கலைஞர் ஸ்விஃப்டி மெக்வே அமைத்திருக்கும் இசை உறுதுணையாக இருக்கிறது. கைபா ஃபிலிம் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவரும், முதன்மைச் செயல் அலுவலருமான டெல் கணேசன் மற்றும் ஜி.பி.திமோதியோஸ் ஆகியோர் தயாரிப்பில்  உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

சாகஸங்கள் நிறைந்த கிரைம்  த்ரில்லர் பாணிப் படம் இது. டெட்ராய்ட்டை அடுத்திருக்கும்  சிறிய நகரம் ஒன்றில் தொடர்ந்து கொலைகள் நடப்பதையும் அதை இரு காவல் துறை அதிகாரிகள் துப்பறிவதும்தான் கதை. கதையோட்டத்தில், அமானுஷ்யமான நைன் ரோக் நுழைவதிலிருந்து பார்ப்பவர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிடுவார்கள். மனிதனும் மனிதன் அல்லாத இருள் சூழ் உலகவாசிகளும் விசித்திரமான கோர சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதில் வரும் பெண் பாத்திரம் ராணுவப் பின்புலத்தோடு மிடுக்காகத் தோற்றமளிக்கிறார்; நடிப்பும் அச்சு அசல் ராணுவ அதிகாரியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. படத்தின் முடிவு சற்றும் எதிர்பாராதது – ஆனால் ஆளை அசத்தும் முடிவு!

“ஒளிப்பதிவு, தயாரிப்பு, ஒலியமைப்பு, எடிட்டிங் போன்ற ஓவ்வொரு துறையில் பணியாற்றியிருப்பவர்களும் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருப்பதைப் படம் பார்ப்பவர்கள் 100% ஒப்புக்கொள்வார்கள்”  என கைபா ஃபிலிம்ஸ் தலைவர் டெல் கணேசன் சொல்கிறார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் தாங்கள் வழக்கம்போல வல்லுநர்கள் எனபதை  CINEDIGM மீண்டும் நிரூபித்திருக்கிறது. மாறி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தன்வயப்படுத்தி, கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான பொழுதுபோக்கு வழங்கும் CINEDIGM  மக்கள் மனதில் நிச்சயம் இடம்பிடிக்கும்.

கைபா ஃபிலிம்ஸ் சிறப்பான ஒரிஜினல் படங்களையும், தரமான இசைக் காணொளிகளையும் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment