Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Friday 26 June 2020

கொரோனாவால் வேலையிழந்த

கொரோனாவால் வேலையிழந்த  சினிமா தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் போல பணம் வழங்கிய தயாரிப்பு நிறுவனம்.  நெகிழும் தொழிலாளர்கள்.


இயக்குனர் புஷ்கர் &காயத்ரி யின்  வால்வாட்சர் பிலிம்ஸ் மற்றும் அமேசான்  இணைந்து வெப்சீரியஸ் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது.



நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் இந்த வெப்சீரியசின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றிவட்டாரங்களில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதைத்தொடர்ந்து படப்பிடிப்பு  தொழிலாளர்கள் அனைவரும் வேலையில்லாமல் வீட்டில் முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து நான்கு ஐந்து மாதங்கள் படப்பிடிப்பை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடி க்கு தள்ளபட்டார்கள்.

நிவாரண உதவிகளை சினிமா சங்கங்கள் செய்துவந்தாலும் பணப்பற்றாக்குறை பலருக்கும் இருந்துவந்ததை அடுத்து அமேசான் , வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தனது படத்தில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதச்சம்பளம் வழங்க முடிவு செய்து அனைவருக்கும் மாதச்சம்பளம் வழங்கியிருக்கிறது.

இந்த கொரோனா ஊரடங்கில் சூட்டிங் இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதச்சம்பளம் போல பணம் வளங்கியது இதுவே முதன்முறை.  இப்படி வேலையில்லாமல் பொருளாதாரத்தில் தவித்தவர்களுக்கு உதவி செய்த பட நிறுவனத்தினரை பாராட்டி வருகிறார்களாம் அந்த படகுழுவினர்.

இந்த படப்பிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்களாம்.

மனித நேயம் இன்னும் சினிமாவில் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment