Featured post

Yolo Movie Review

Yolo Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yolo ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு.இந்த ப...

Friday, 2 October 2020

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும்

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “ சாய் தீனா ”
" அலறல் " திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது.




புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் தீனா அவர்கள் மாறுபட்ட இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி - தன்யஸ்ரீ மாஸ்டர் – K. சுடர் நிலவன்  ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர்களான ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் இருவரும் கூறுகையில் இப்படம் உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம் மற்றும் குழந்தை மனோதத்துவவியல் கருவாகக்கொண்டு திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment