Featured post

Made in Korea Movie Review

Made in Korea Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம made in korea படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது...

Saturday, 14 March 2026

Made in Korea Movie Review

Made in Korea Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம made in korea படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Ra. Karthik. இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு.  இந்த படத்துல Priyanka Mohan , Park Hye-jin, Si-hun Baek, Rishikanth, Ha-Ram Jo ,  Jae-hyeon Jang   னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை produce பண்ணிருக்கிறது Sreenidhi Sagar. இது ஒரு indo - korean movie. இந்த படம் netflix ல release ஆயிருக்கு. இந்த படம் tamil, telugu, malayalam, hindi, kannada ளையும் release பண்ணிருக்காங்க.   சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இப்போல்லாம் எங்க பாத்தாலும் south korea , K POP , K drama இதெல்லாமே trending ல இருக்கு. இந்த trending க்கு ஏத்த மாதிரி தான் இந்த கதையை கொண்டு வந்திருக்காங்க. indian storytelling மூலமா K drama vibes அ director கொண்டு வந்திருக்காரு. Priyanka Arul Mohan தான் shenba வா நடிச்சிருக்காங்க. இவங்க tamilnadu ல இருக்கற ஒரு சின்ன ஊரை சேந்தவங்க. இவங்களுக்கு korean culture மேல அவ்ளோ பைத்தியமா  இருப்பாங்க. இவங்களுக்கு K drama , k pop songs எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ஆசை பட்ட மாதிரியே loan எடுத்து seoul க்கு போறாங்க. ஆனா இவங்க நினைச்சா மாதிரி seoul இல்ல. culture different அ இருக்கு, language பிரச்சனை, அவங்க சந்திக்கிற சவால்கள் னு கஷ்டப்படுறாங்க. என்னதான் seoul க்கு இவங்க ஆசை பட்டு போனாலும், ஒரு புது chapter இவங்க life ல தொடங்க ஆரம்பிக்குது. புது friends கிடைக்குது, முன்னாடி இருந்ததா விட இன்னும் தைரியமா இருக்காங்க. இந்த படத்துல ஒருத்தரோட அடையாளம், ஏக்கம் அப்புறம் எதிர்பாராம கிடைக்கற நட்பை பத்தி சொல்லுற விதமா அமைச்சிருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது priyanka mohan ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. இவங்களோட நடிப்பு எதார்த்தமாவும், sincere ஆவும் இருந்தது. இவங்களோட performance அ பாராட்டி social media ல நெறய audience post போட்டிருக்காங்க. நெறய பேர் இது ஒரு feel good movie நும் share பண்ணிருக்காங்க. korean wave நம்ம நாட்டுல அதிகமாவே உண்டு அதுக்கு மிக பெரிய காரணம் BTS தான். அந்த வகைல இப்போ இருக்கற k drama fans அப்புறம் GEN z க்கு கண்டிப்பா இந்த படம் பிடிக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. 


cultural fusion, seoul அப்புறம் tamilnadu ல இருக்கற hillstation ஓட அழகு னு படம் பாக்கவே ரொம்ப colourful அ இருந்தது. ஒரு அழகான indo korean படம் தான் இது.   இப்போ இந்த படம் netflix ல available அ இருக்கு.  family எல்லாம் ஒண்ணா சேந்து பாக்கவேண்டிய படம் தான் இந்த made in korea. சோ miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment