Featured post

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore ...

Sunday, 17 October 2021

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ்

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் 'கொலை'.*


'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது. 'விடியும் முன்' புகழ் பாலாஜி கே குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வரை கண்டிராத கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் தோன்றுகிறார்.



இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் பங்குதாரர்களான கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா மற்றும் விக்ரம் குமார், ஆகியோர் தொடர்ச்சியாக படங்களை விஜய் ஆண்டனியுடன் தயாரிக்க உள்ளனர்.


’கொலை’ திரைப்படத்திற்காக லோட்டஸ் பிக்சர்ஸுடன் இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் கைகோர்த்துள்ளது. மலேசியாவை சேர்ந்த லோட்டஸ் குழுமத்தின் டான் ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா ஷங்கர் மற்றும் ஆர் வி எஸ் அசோக் ஆகியோருடன் இணைந்து லோட்டஸ் பிக்சர்ஸுக்கு தலைமை ஏற்றுள்ளார்.



உணவு, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், தோட்டங்கள், திரையரங்கு, கடைகள், உடல்நலம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இயங்கி வரும் லோட்டஸ் குழுமம், மலேசியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாகும்.


'விடியும் முன்' படத்தை இயக்க லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சென்னை திரும்பிய பாலாஜி கே குமார், அப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றதோடு, அவரது அடுத்து படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார். தற்போது அவர் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கியுள்ளார். 'கொலை' திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ‘கொலை’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


'இறைவி, இறுதி சுற்று, கோலமாவு கோகிலா' மற்றும் 'விடியும் முன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மெரினா மற்றும் நெற்றிக்கண் புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.


கர்ணன், சர்பட்டா பரம்பரை மற்றும் பரியேறும் பெருமாள் புகழ் செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாள, கே ஆறுசாமி கலை இயக்கத்திற்கும், மகேஷ் மேத்யூ சண்டை காட்சிகளுக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.


படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகளவில் தேவைப்படுவதால், பணியை விரைந்து முடிக்க சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ‘கொலை’ திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


***

No comments:

Post a Comment