Featured post

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  ...

Sunday, 17 October 2021

நடிகர் விஜய் கௌரிஷ் நடித்த "பியார்" குறும்படம் வெளியீடு

 *நடிகர் விஜய் கௌரிஷ் நடித்த "பியார்" குறும்படம் வெளியீடு:* 

"சதுரங்க வேட்டை" பட புகழ் திரு நட்ராஜ் அவர்கள்  கதாநாயகனாக நடித்த *"சண்டிமுனி"* திரைப்படத்தின் இயக்குனர் திரு. *மில்கா.S. செல்வக்குமார்* "பியார்" என்னும்  குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் *நடிகர்கள் விஜய் கௌரிஷ்* மற்றும் *திரு.ஷபி பாபு* நடித்துள்ளனர். இக்குறும்படம் தமிழ் திரை உலகில் முக்கிய பிரபலங்களால் பாராட்டப் பட்டுள்ளது. இக்குறும்படம் *தமிழ் ஷார்ட் கட்ஸ் யூடியூப்  சேனலில்* ஆயுத பூஜை அன்று வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படம் மக்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 8 தோட்டாக்கள் ,ஜீவி பட கதாநாயகன் திரு.வெற்றி நடித்த *"ஜோதி"* என்னும் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய் கௌரிஷ். "ஜோதி" திரைப்படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன் , மக்களை மகிழ்விக்க நாயகன், வில்லன் என்றில்லாமல் அனைத்து விதமான முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிப்பதே தன் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் விஜய் கௌரிஷ்.



 *"பியார்"* குறும்படத்தை இயக்கிய திரு.மில்கா.S. செல்வகுமார் , "சண்டிமுனி" திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யோகிபாபு அவர்கள் நடிக்கும் *"கங்காதேவி"* என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

No comments:

Post a Comment