Featured post

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

 *மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”  பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* *பிரியங்கா மோகன் நடிக்கும்,  க...

Wednesday, 3 November 2021

திருப்பதியில் நடிகர் விஷால்! வேண்டுதலை

 திருப்பதியில் நடிகர் விஷால்! வேண்டுதலை நிறைவேற்றினார் !! 


நாளை மறுநாள் தீபாவளி வெளியீடாக எனிமி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.




 சென்னையில் எனிமி படக்குழு புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றது. 

இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு  மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம்  செய்து வருகிறார்.

No comments:

Post a Comment