Featured post

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் அட்டகாசமான பட வரிசைகள்

 சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் அட்டகாசமான பட வரிசைகள் சோனியின் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன், மீண்டும் பெரிய த...

Thursday, 12 February 2026

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் அட்டகாசமான பட வரிசைகள்

 சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் அட்டகாசமான பட வரிசைகள்



சோனியின் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன், மீண்டும் பெரிய திரையில் தோன்றுகிறார். உலகளாவிய அளவில் தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்திழுத்துள்ள ஜுமான்ஜி பத்தொடரின் அடுத்த பாகமும் இவ்வருடம் வெளியாகவுள்ளது. சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் 2026 ஆம் ஆண்டில் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதிக்கவுள்ளது. 


தொடர்ந்து தரமான படங்கள் வழங்குவதை ஒரு கலையாக மாற்றியுள்ளது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட். கடந்த ஆண்டில், வணிக வெற்றிக்கும், கலாச்சாரத் தொடர்புக்கும் இடையே ஓர் அரிய சமநிலையை உருவாக்கியிருந்தது சோனி ஸ்டுடியோ. அது சாத்தியமாக, ஒற்றை வழிமுறையென ஒன்றை மட்டும் கடைப்பிடிக்காததே காரணமாகும். 2025 இல், இரண்டு படங்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தின. ஒன்று டகோட்டா ஜான்சன், கிறிஸ் எவன்ஸ் மற்றும் பெட்ரோ பாஸ்கல் நடித்த Materialists படமாகும். உலகளாவியளவில், இப்படத்தைப் பற்றிய வலுவான வாய்வழித் தகவல் பரிமாற்றத்தாலேயே வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து, உலகமெங்கும் சோனி வினியோகித்த Demon Slayer: Kimetsu No Yaiba - Infinity Castle எனும் அனிம் படம் ஒரு பெரும் ஓட்டத்தைக் கண்டது.  இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல், டிக்கெட் முன்பதிவுகளின் வரலாற்றையே மாற்றி எழுதியது. இந்தியாவில், எப்பொழுதையும் விட அதிக வசூல் செய்த சர்வதேச அனிமேஷன் திரைப்படமாக விளங்கியது. இது, ரசிகர்கள் விரும்பும் சினிமாவை உலகமெங்கும் கோண்டு செல்லும் சோனியின் செயற்திறனுக்கும் புகழுக்கும் ஒரு மைல்கல்லாக விளங்கியது.


அதே வேகத்துடன், இப்போது சோனி 2026 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. மேலும் சோனியின் வரவிருக்கும் படைப்புகளாக அறிவியல் புனைகதை த்ரில்லர்கள், பெருமைமிகு டிராமா வகைமை படங்கள், எல்லா வயதினருக்குமான அனிமேஷன் படங்கள், மற்றும் IMAX திரைகள் மற்றும் பிரீமியம் வடிவங்களுக்காக வடிவமைக்கப்பட்ட படத்தொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாரம்பரியமான ஸ்டுடியோவான சோனி, தன் செயற்திட்டத்தைக் காலத்திற்கேற்றாற்போல் புது ரசிகர்களைக் கவரும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  


உவகையளிக்கும் தரமான உள்ளடக்கம்


பிப்ரவரி 13, 2026 அன்று வெளியாகும் Amazon MGM ஸ்டுடியோவின் Crime 101 படம், மசோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் மூலம் விநியோகிக்கப்படுகிறது. Don Winslow-வின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி சினிமாவாக்கியுள்ளார் Bart Layton. துல்லியமாகத் திருடும் சாமர்த்தியசாலியான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன், நம்பிக்கையிழந்த ஏமாற்றம் நிரம்பிய காப்பீட்டுத் தரகரான Halle Berry, ஒரு சங்கடமான கூட்டு வைத்து ஒரு பிரச்சனையைத் தீர்க்க நினைக்கிறார்.  


Spider-Verse and K-Pop: Demon Hunters முதலிய படங்களின் பின்னணியில் உள்ள குழு, அட்டகாசமானதொரு அனிமேஷன் படத்துடன் மீண்டும் களம் காண்கின்றனர். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன், NBA Champ Stephen Curry-யும் இணையும் விறுவிறுப்பான அனிமேஷன் ஸ்போர்ட்ஸ் காமெடிப் படம் ஃபிப்ரவரி 20, 2026 அன்று வெளியாகிறது.


பெரிய கதைக்கருவும், மிகப்பெரிய உலகங்களும்


அமேசான் MGM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட அறிவியல் த்ரில்லர் படமான Project Hail Mary, 2026 மார்ச் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் மனிதகுலத்தைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடுகிறார் ரயான் கோஸ்லிங். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ரிலீசிங் நிறுவனம், IMAX மற்றும் பிற பிரீமியம் திரையரங்க வடிவங்களில் இந்தப் படத்தை வெளியிடுகிறது. 


Andy Weir -இன் அதிகம் விற்பனையான சிறந்த  நாவல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு, Phil Lord மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம். தான் யார் என்பதையும், தன் பணி என்ன என்பதையும் மறந்த ரைலண்ட் கிரேஸ் (ரயன் கோஸ்லிங்) என்ற விண்வெளி வீரரை மர்மமான விண்கலம் ஒன்றில் விழித்தெழுக்கிறார். 


மே மாதத்தில், அமேசான் MGM ஸ்டுடியோஸின் The Sheep Detectives படம் வெளியாகிறது. அசலான மர்மத்தை, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் எதிர்பாராத விசாரணைக் குழு பற்றிய படம். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ரிலீசிங் விநியோகிக்கும் இப்படம், 2026, மே 8 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் Hugh Jackman மற்றும் Bryan Cranston ஆகியோர் நடிக்கின்றனர்.


அமேசான் MGM ஸ்டுடியோஸ், Masters of the Universe படத்தை ஜூன் மாதம் திரைக்குக் கொண்டு வருகிறது சோனி. மிகவும் பிரபலமான இப்படத்தொடரை, இயக்குநர் Travis Knight மீண்டும் பெரிய திரைக்குக் கொண்டு வருகிறார். இந்த லைவ் ஆக்‌ஷன் sci-fi சாகசப்படத்தை, ஜூன் 5, 2026 அன்று சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் லீசிங் விநியோகம் செய்கிறது. 


படத்தொடர்கள், அச்சுறுத்துலும் ஆற்றலும்


ஜூலை 24, 2026 அன்று வெளியாகிறது Evil Dead Burn எனும் அமானுஷ்யப் படம். 

Evil Dead (2013), Evil Dead Rise (2023) ஆகிய படங்களைத் தொடர்ந்து, இப்படத்தொடரில் வெளியாகும் மூன்றாவது தனிப் படைப்பாகும். இப்படத்தை Sebastien Vanicek இயக்குகிறார்.


ஜூலை 31, 2026 அன்று வெளியாகும் Spider-Man: Brand New Day திரைப்படத்தில், Destin Daniel Cretton இயக்கத்தில் Zendaya-வுடன் இணைகிறார் என்றுமே புகழ் குன்றிடாத Tom Holland. பீட்டர் பார்க்கர் மறக்கப்பட்டு, புதிய வில்லன்களை எதிர்கொள்ளும் No Way Home உலகிற்கு டாம் ஹாலண்ட் ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாததால், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் வெளியான Spider-Man: No Way Home படம், இந்திய பாக்ஸ் ஆஃபீஸ் வரலாற்றில், ரூ.300 கோடிக்கு அருகில் வசூலித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் வெளியீடுகளில் ஒன்றாக மாறியது. 


ஆகஸ்ட் 21, 2026 அன்று Blumhouse-இன் insidious படமும், செப்டம்பர் 18, 2026 அன்று Zach Cregger இயக்கிய Resident Evil படமும்.வெளியாகிறது. நகரம் முழுவதும் பரவும் தொற்றுநோயால் சிக்கிய ஒரு கூரியரின் கண்களின் மூலம் உயிர்வாழும்-திகில் குழப்பத்தை மீண்டும் கற்பனை செய்கிறது. 


அமேசான் MGM ஸ்டுடியோஸின் மற்றொரு எதிர்பார்க்கப்படும் திரைப்படம் Verity ஆகும். இதில் Anne Hathaway, Dakota Johnson Josh Hartnett முதலியோர் நடித்துள்ளனர். Michael Showalter இயக்கியுள்ள இப்படத்தை விநியோகிக்கும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ரிலீசிங் நிறுவனம்,  அக்டோபர் 2, 2026 அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 


அக்டோபரில், Aaron Sorkin இயக்கிய The Social Reckoning படம் வெளியாகிறது.  ஒரு ஃபேஸ்புக் பொறியாளரும்,  ஒரு பத்திரிகையாளரும் தளத்தின் இருண்ட ரகசியங்களை இப்படத்தில் அம்பலப்படுத்துகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து,  William Eubank இயக்கிய Archangel படம் நவம்பர் 2026 இல் வெளியாகிறது.


இந்த ஆண்டின் முடிவில், பிளாக்பஸ்டர் படமான ஜுமாஞ்சி 3 டிசம்பரில் வெளியாகிறது. Dwayne Johnson, Jack Black மற்றும் Kevin Hart நடித்திருக்கும் இந்த சாகசப்படம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகிறது. 


சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் 2026 படவரிசை, குறிப்பிட்ட எந்த ஒரு தலைப்பாலும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் பலதரப்பட்ட வகைமைகளை உள்ளடக்கிப் பெரிய திரையில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் புதுமையான கதைக்கருக்கள், ஆச்சரியங்களைச் சோனி வழங்கவுள்ளன.

No comments:

Post a Comment