Featured post

Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team

 Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team for 45-Day Action Marathon Shoot of Yash’s Toxic...

Tuesday, 2 November 2021

அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் - “ஓ மணப்பெண்ணே”

 அனைவருக்கும்  இதயம் கனிந்த நன்றிகள் - “ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள் ! 


A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் சத்யநாராயணா கொனேரு, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Productions இருவரும் நடிகர் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் “ஓ மணப்பெண்ணே” படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புதமான வரவேற்பில், மிகப்பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். Disney Plus Hotstar ல் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வரவேற்பை கொண்டாடும் வகையில், படத்தை வெற்றிபெறச்செய்த ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள்  தங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தரமான கதைகளுக்கு எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு தரும், தமிழ் ரசிகர்களின் மீதான பெரும் நம்பிக்கையில், தங்கள் திரைப்பயணத்தை தமிழ் சினிமாவில் தொடர திட்டமிட்டுள்ளார்கள்.  மிக விரைவில் சில பெரிய திரைப்படங்களை தமிழில் அறிவிக்கவுள்ளார்கள். இத்தயாரிப்பு நிறுவனம்  தெலுங்கில் ரவிதேஜா, அர்ஜூன் நடிப்பில், தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கும் கில்லாடி படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. 





“ஓ மணப்பெண்ணே” திரைப்படம் Disney Plus Hotstar ல் 2021 அக்டோபர் 22 அன்று வெளியானது. இத்திரைப்படம் தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இயக்குநர் கார்த்திக் சுந்தர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

விஷால் சந்திரசேகேர் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் படத்தொகுப்பு செய்துள்ளார். முரளி கிருஷ்ணா எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றியுள்ளார். 


தயாரிப்பாளர் ரமேஷ் வர்மா பென்மட்ஷா, தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்ற ‘ராட்சசன்’ திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ ரீமேக்கான தெலுங்கு திரைப்படம் Rakshasudu படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment